sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளி கட்டணங்களை முறைப்படுத்த பெற்றோர் கோரிக்கை

தனியார் பள்ளி கட்டணங்களை முறைப்படுத்த பெற்றோர் கோரிக்கை

தனியார் பள்ளி கட்டணங்களை முறைப்படுத்த பெற்றோர் கோரிக்கை


UPDATED : மே 16, 2026 06:28 PM

ADDED : மே 16, 2026 06:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2026 06:28 PM ADDED : மே 16, 2026 06:29 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
“தனியார் பள்ளி கட்டணங்களை முறைப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என பெற்றோர் சங்கத்தினர் கோரி உள்ளனர்.

அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். இதை பயன்படுத்தி கொண்டு, தனியார் பள்ளிகளில் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படுகிறது.

குறிப்பாக, வரும் கல்வியாண்டில் 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த பல தனியார் பள்ளிகள் முடிவு செய்து உள்ளன. இது, பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து, கர்நாடக பள்ளி பெற்றோர் சங்கத்தினர் கூறியதாவது:


மழலையர் பள்ளிகளில் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. சில கல்வி நிறுவனங்களில் கட்டணம் இரண்டு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் கல்வி கட்டணம் உயர்த்தப்படுவது, நடுத்தர வர்க்கத்தினருக்கு நிதி சுமையை ஏற்படுத்துகிற து.

எனவே, தனியார் பள்ளிகளில் கட்டண உயர்வை கண்காணிக்க மாநில அரசு சிறப்பு குழு அமைக்க வேண்டும். இதுபோன்ற குழுக்கள் டில்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.

தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணங்களை உயர்த்துவதற்கு அரசின் ஒப்புதல் தேவை என்ற சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். தனியார் பள்ளி கட்டணங்களை முறைப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us