sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளுக்கு புத்தகம், சீருடை அனுப்பி வைப்பு

அரசு பள்ளிகளுக்கு புத்தகம், சீருடை அனுப்பி வைப்பு

அரசு பள்ளிகளுக்கு புத்தகம், சீருடை அனுப்பி வைப்பு


UPDATED : மே 17, 2026 12:51 PM

ADDED : மே 17, 2026 12:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 12:51 PM ADDED : மே 17, 2026 12:53 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நோட்டு, புத்தகம், புத்தக பை, சீருடை, காலணி அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது.

ஜூனில் புதிய கல்வி ஆண்டு துவங்குகிறது. ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம், சீருடை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்க பள்ளி கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.

இதற்காக, ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலை பள்ளியில் இருந்து பள்ளிகளுக்கு பாட புத்தகம், நோட்டு, சீருடை அனுப்பும் பணி, முதன்மை கல்வி அலுவலர் மான்விழி முன்னிலையில் நேற்று முன்தினம் துவங்கியது. இது குறித்து அவர் கூறியதாவது:

மாவட்டத்தில், 113 அரசு-நகரவை மேல்நிலை பள்ளிகள், 77 அரசு-நகரவை உயர்நிலை பள்ளிகள், 17 நிதியுதவி மேல்நிலை பள்ளிகள், 13 நிதியுதவி உயர்நிலை பள்ளிகள், 10 சுய நிதி மேல்நிலை பள்ளிகள், 4 சுய நிதி உயர்நிலை பள்ளிகளுக்கு இலவச கல்வி நல பொருட்கள், 6 முதல் பிளஸ் 2 வரை இலவச பாட புத்தகம், 6 முதல் 10ம் வகுப்பு வரை நோட்டு புத்தகம், 6-8 மாணவ,மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளது.

அரசு-நகரவை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 74,120, நிதியுதவி உயர் மேல்நிலை பள்ளிகள் 18,126, சுய நிதி உயர்-மேல்நிலை பள்ளிகள் 1,643 என 6 முதல் பிளஸ் 2 வரை மொத்தம் 93,889 மாணவ,மாணவிகள் உள்ளனர். இவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும்.

6 முதல் 10ம் வகுப்பு வரையிலான 64,338 மாணவ,மாணவிகளுக்கு நோட்டு, 6-8 வகுப்பில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் 26,864, மாணவிகள் 27,328 பேருக்கு இலவச சீருடை, 6 முதல் பிளஸ் 2 வரையிலான 92,246 பேருக்கு புத்தக பை, 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான 64,338 பேருக்கு ஷூ மற்றும் சாக்ஸ், மலைப்பகுதிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் 1,361 பேருக்கு ஆங்கிள் பூட், இதே அளவுக்கு மழை கோட்டு, கம்பளி சட்டை வழங்கப்படும்.

6 முதல் 9ம் வகுப்ப வரையிலான புதிய மாணவர் சேர்க்கைக்கு மட்டும் 14,435 கணித உபகரண பெட்டி, 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கைக்கு மட்டும் 16,009 புவியியல் வரைபடம் வழங்கப்படும். 1,2ம் வகுப்பில் 42 பேருக்கு வண்ண

மெழுகு குச்சி, 3 - 5ம் வகுப்பில் 179 பேருக்கு வண்ண பென்சில், 1 - 5ம் வகுப்பில் 147 பேருக்கு காலணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us