sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவகங்கை அரசு ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பம் வரவேற்பு

சிவகங்கை அரசு ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பம் வரவேற்பு

சிவகங்கை அரசு ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : மே 20, 2026 06:29 PM

ADDED : மே 20, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2026 06:29 PM ADDED : மே 20, 2026 06:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் சேர மாணவர்கள் ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:


இக்கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மே 16 முதல் துவங்கி நடந்து வருகிறது. இங்கு பிட்டர், எலக்ட்ரீசியன், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், பிட்டர், எலக்ட்ரீசியன், கணினி (கோபா) இயக்குபவர், அட்வான்ஸ்டு சி.என்.சி., டெக்னீசியன், இண்டஸ்டிரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிடல் மெனுபேக்சரிங் டெக்னீசியன், மெக்கானிக் மின் வாகனம், வெல்டர் ஆகிய பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

ஜூன் 3 வரை மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவர். இதில் சேர வெல்டர் பிரிவு தவிர மற்ற பிரிவில் சேர கட்டாயம் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வெல்டர் பிரிவில் சேரலாம். மாணவர்கள் 'www.skilltraining.tn.gov.in' என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அலைபேசி எண், மதிப்பெண் சான்று, ஜாதி, மாற்று, முன்னுரிமை சான்று, ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, இ - மெயில் முகவரியுடன் விண்ணப்பிக்கவும்.

நேரடியாக சேர விண்ணப்ப கட்டணமாக ரூ.50 உடன் கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது ரூ.750 மாத உதவி தொகை, சைக்கிள், பாடபுத்தகம், சீருடை, பஸ் பாஸ் இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 99436 10476 கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us