தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 20, 2026 06:30 PM

ADDED : மே 20, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2026 06:30 PM ADDED : மே 20, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, தாராபுரம், திருப்பூர், காங்கேயம் பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற, 8ம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்பு கல்வி தகுதி போதுமானது.

மேல்நிலை கல்வி மற்றும் உயர்கல்வி பெற்றவர்களும், வயது வரம்பு, 14 வயது முதல், 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும், https://skilltraining.tn.gov.in/detitiadm/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

ஐ.டி.ஐ.,களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தின்போது, தமிழக அரசின் விலையில்லா இரு இணை சீருடைகள், மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், ஷூ மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

மேலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதந்தோறும், ரூ.750 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், 6 வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்ற பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முன்னணி நிறுவனங்களில், தொழிற்பழகுநர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், அருகில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்று, ஆதார்கார்டு ஆகியவற்றுடன் நேரில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, 94990 55695; 94990 55700; 94990 55698; 81247 12445 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us