sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மும்மொழி கொள்கை விவகாரம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மும்மொழி கொள்கை விவகாரம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மும்மொழி கொள்கை விவகாரம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்


UPDATED : மே 28, 2026 01:36 PM

ADDED : மே 28, 2026 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2026 01:36 PM ADDED : மே 28, 2026 01:37 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
பள்ளிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், வரும் ஜூலை 1 முதல் மும்மொழி கற்பது கட்டாயம் என்ற சி.பி.எஸ்.இ.,யின் கொள்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, மத்திய அரசு, சி.பி.எஸ்.இ., மற்றும் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

நாடு முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பள்ளிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், வரும் ஜூலை 1 முதல் மும்மொழி கற்பது கட்டாயம் என, சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பாடத்திட்டத்தின்படி, இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு மொழியை கற்க விரும்புவோர் அதை மூன்றாவது மொழியாக கற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மூன்றாவது மொழிக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ.,யின் இந்த மும்மொழி கொள்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யக் கோரி மத்திய அரசு, சி.பி.எஸ்.இ., மற்றும் என்.சி.இ.ஆர்.டி.,க்கு உத்தரவிட்டனர்.

மேலும், இந்த புதிய கொள்கையைச் செயல்படுத்துவதற்கான சி.பி.எஸ்.இ.,யின் உள்கட்டமைப்பு மற்றும் தயார் நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்திக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us