sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் வினாத்தாள் கசிவு; மேலும் இருவர் கைது

நீட் வினாத்தாள் கசிவு; மேலும் இருவர் கைது

நீட் வினாத்தாள் கசிவு; மேலும் இருவர் கைது


UPDATED : மே 28, 2026 01:37 PM

ADDED : மே 28, 2026 01:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2026 01:37 PM ADDED : மே 28, 2026 01:38 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மேலும் இருவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் இந்தாண்டு சேருவதற்கான 'நீட்' பொது நுழைவுத் தேர்வு கடந்த 3ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுதும் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர்.

தேர்வுக்கு முன்பாகவே, நீட் தேர்விற்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு அடுத்த மாதம் 21ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கேரளா, பீஹார் உட்பட நாடு முழுதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.

இதன் அடிப்படையில் இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. மகாராஷ்டிராவின் லாத்தூரைச் சேர்ந்த மருத்துவரான டாக்டர் மனோஜ் ஷிரூர், ஒரு பயிற்சி மைய உரிமையாளரின் மகன் உட்பட 3 மாணவர்களுக்கு வேதியியல் வினாத்தாள்களைப் பெற்றுத் தந்துள்ளார்.

அதே போல, புனேவில் உள்ள 'அபாங் பிரபு மெடிக்கல் அகாடமி' என்ற பயிற்சி மையத்தின் இயற்பியல் ஆசிரியர் தேஜஸ், ஹர்ஷத்குமார், ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மனிஷா ஹவல்தார் என்பவரிடம் இயற்பியல் வினாத்தாள்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தொடர்புள்ள மற்ற நபர்களையும் கண்டறிய சி.பி.ஐ., தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us