sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக மாணவர்கள் அதிகம் விரும்பும் சென்னை கல்லூரிகள்!

தமிழக மாணவர்கள் அதிகம் விரும்பும் சென்னை கல்லூரிகள்!

தமிழக மாணவர்கள் அதிகம் விரும்பும் சென்னை கல்லூரிகள்!


UPDATED : மே 28, 2026 01:58 PM

ADDED : மே 28, 2026 02:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2026 01:58 PM ADDED : மே 28, 2026 02:00 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் மாணவர்கள் அதிகம் விரும்பும் முதல் ஐந்து அரசு கல்லூரிகளில் சென்னை கல்லூரிகள் 4 இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்களில் சேர்க்கை நடந்து வருகிறது. அதிகம் விரும்பப்படும் முதல் ஐந்து கல்லூரிகளில் நான்கு கல்லூரிகள் சென்னையை சேர்ந்தவை.

முதல் இடம்

181 அரசு கல்லூரிகளில் 2380 இடங்களுக்கு இது வரை அதிகபட்சமாக 32808 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பிரசிடென்சி கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

2வது இடம்

கோவை அரசு கலை கல்லூரியில் 1727 இடங்களுக்கு இது வரை 26,644 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 2வது இடத்தில் உள்ளது.

3வது இடம்


நந்தனத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் 1430 இடங்களுக்கு இது வரை 25,032 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 3வது இடத்தில் உள்ளது.

4வது இடம்

வியாசர்பாடியில் உள்ள அரசு கலை கல்லூரியில் 1086 இடங்களுக்கு இது வரை 24,301 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 4வது இடத்தில் உள்ளது.

5வது இடம்


சென்னையில் உள்ள குயின் மேரி கல்லூரியில் 2,038 இடங்களுக்கு இது வரை 19,665 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 5வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. இது வரை மொத்தம் 2,05,485 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேலும் 1,52,997 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதில் மாணவிகள் 92,848 பேர், மாணவர்கள் 60,086 ஆவர்.

மேலும் திருநங்கைகள் 63 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 29. மாணவர்கள் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. கல்லூரிகள் தகுதி பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்களை தங்களது கல்லூரியில் படிக்கும் வாய்ப்புகளை வழங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us