UPDATED : ஜூன் 01, 2026 10:08 AM
ADDED : ஜூன் 01, 2026 10:11 AM

சென்னை:
மத்திய அரசின் மும்மொழி கொள்கையால், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர்களுக்கு தமிழ் கற்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின்படி, இந்த ஆண்டு முதல் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதை, தமிழக அரசு எதிர்த்து வரும் நிலையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு பள்ளிகளில், இந்த கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் மொழியாக தமிழ் மற்றும் சமஸ்கிருதம் கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவற்றில் ஒன்றை விருப்ப மொழியாக தேர்வு செய்யும்படி மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் விளக்கி உள்ளனர்.
இது வரை, மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ் கற்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது மும்மொழி கொள்கையால் வாய்ப்பு கிடைத்துள்ளதால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
