தொழில் முனைவோருக்கு கடன் மானிய திட்டங்கள் வழிகாட்டுதல்
தொழில் முனைவோருக்கு கடன் மானிய திட்டங்கள் வழிகாட்டுதல்
UPDATED : ஜூன் 06, 2026 10:46 AM
ADDED : ஜூன் 06, 2026 10:48 AM
கோவை:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அவசரகால கடன் வரம்பு உத்தரவாதத் திட்டம் (இ.சி.எல்.ஜி.எஸ்., 5.0) தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு மாநில வங்கி ஒருங்கிணைப்புக் குழுவும், கோவை மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கியும் இணைந்து இந்த நிகழ்ச்சியை, நேற்று கொடிசியா வளாகத்தில் நடத்தின.
மத்திய அரசின் 16 வகையான கடன் மற்றும் மானியத் திட்டங்களை ஒரே தளத்தில் வழங்கும் 'ஜன் சமர்த்' டிஜிட்டல் போர்டல் குறித்து விளக்கப்பட்டது. தொழில் முனைவோரின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் என்.சி.ஜி.டி.சி., உதவி பொது மேலாளர் அலீம்மா சன்னி, தமிழ்நாடு ஸ்டேட் வங்கி ஒருங்கிணைப்புக் குழு மேலாளர் விஜயா, தலைமை மாவட்ட மேலாளர் கார்த்திகேயன், தொழில் முனைவோர், தொழில் சங்க பிரதிநிதிகள், வங்கியாளர்கள், நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 300க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
