தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி


UPDATED : ஜூன் 07, 2026 01:19 PM

ADDED : ஜூன் 07, 2026 01:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 01:19 PM ADDED : ஜூன் 07, 2026 01:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி, 'தாட்கோ' வாயிலாக அளிக்கப்பட உள்ளது என, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


'தாட்கோ' மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, உணவு ஊட்டச்சத்து இயல், உடல் எடை சீரமைப்பு ஆகிய, வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சிகளை வழங்க உள்ளது.

இதற்கு, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, 18 - 35 வயதிற்குட்பட்ட, இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 50 நாட்கள்.

ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், இந்த பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்போரின் செலவினத் தொகை, தாட்கோவால் ஏற்கப்படும்.

பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும். பயிற்சியில் சேருவதற்கு, www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us