தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுக்கு இலவச பயிற்சி

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுக்கு இலவச பயிற்சி

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : ஜூன் 07, 2026 11:36 PM

ADDED : ஜூன் 07, 2026 11:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 11:36 PM ADDED : ஜூன் 07, 2026 11:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'பாரதி பயிலகம்' ஐ.ஏ.எஸ்., அகாடமியில், சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர, வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அகாடமி இயக்குநர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சேவா பாரதியின், 'பாரதி பயிலகம்' கடந்த, 2020ம் ஆண்டு முதல், அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. கடந்த, 2022ம் ஆண்டு முதல், உண்டு, உறைவிடத்துடன் கூடிய பயிற்சியை அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு பயிற்சியில் சேர, தமிழகம் முழுதும் இருந்து, 1,600 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அவர்களில், 500 பேர், சென்னையில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். அதன் வழியே தேர்வு செய்யப்பட்ட, 100 பேருக்கு, பயிற்சி வழங்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பாரதி பயிலகத்தில் படித்தவர்களில், மாணவர் ராமநாதன் ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்துள்ளார். மேலும், தமிழக அரசின், குரூப் - 1 தேர்வில், 5 மாணவர்கள்; குரூப் - 2, 2ஏ பணிகளில், 12 மாணவர்கள்; மத்திய அரசின் ஐ.பி., பணியில் ஒருவர் சேர்ந்துள்ளனர். அவர்களில், ஒருவர் மாற்றுத்திறனாளி மாணவர்.

இந்நிலையில், யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுக்கான இலவச பயிற்சி திட்டத்தை, 'பாரதி பயிலகம்' ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகாடமி அறிவித்துள்ளது. சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த பயிற்சியில் சேரலாம். உணவு, தங்குமிடம் இலவசம்.

பொதுவான பாடங்களுக்கு தேர்வு தொடர்கள், விரிவான மதிப்பீடு, தனிப்பட்ட வழிகாட்டுதல், தரமான கற்றல் சூழல், புவியியல், சமூகவியல், மானிடவியல் உட்பட விருப்ப பாடங்களுக்கும் சிறப்பு பயிற்சி, தேர்வுகள் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், www.bharathipayilagam.com என்ற இணையதளத்தில், வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு, சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள, பாரதி பயிலகத்துக்கு நேரிலோ அல்லது 90032 42208; 044 47827117 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us