UPDATED : ஜூன் 09, 2026 05:23 PM
ADDED : ஜூன் 09, 2026 05:23 PM
கடலூர்:
கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது.
கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 5ம் தேதி முடிந்தது. அதனைத் தொடர்ந்து, பொது கலந்தாய்வு நேற்று துவங்கியது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் குழுவினர் சான்றிதழ்களை சரிபார்த்து கலந்தாய்வு நடத்தினர்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களை தவிர்த்து மற்ற பாடங்களில் 300 முதல் 400 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இன்று (9ம் தேதி) 280 முதல் 299 மதிப்பெண் வரையும், 10ம் தேதி 265 முதல் 279 வரை, 11ம் தேதி 250 முதல் 264 வரை, 12ம் தேதி 240 முதல் 249 வரை, 15ம் தேதி 230 முதல் 239 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
