UPDATED : ஜூன் 10, 2026 04:35 PM
ADDED : ஜூன் 10, 2026 04:37 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி:
கேரள அரசின் பொது கல்வித்துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் முதல்வரின் கல்வி உதவித்தொகைக்கான போட்டித் தேர்வில், மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி நான்காம் வகுப்பு மாணவர்கள், 14 பேர் பங்கேற்று, தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கேரளா அரசு தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், எஸ்.எம்.சி., மற்றும் எஸ்.எஸ்.ஜி., உறுப்பினர்கள் பாராட்டினர்.
