அரசு வழக்கறிஞர்கள் காலிபணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு
அரசு வழக்கறிஞர்கள் காலிபணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு
UPDATED : ஜூன் 10, 2026 05:04 PM
ADDED : ஜூன் 10, 2026 05:06 PM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில், காலியாக உள்ள அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிகலாம் என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில், காலியாக உள்ள அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா சட்டப்படி நியமனம் செய்யப்படுகிறார்கள். மேலும், அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு உரிமையியல் வழக்கறிஞர்கள் ஆகியோரும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில், 11 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கையும், மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த வழக்கறிஞர் தங்கள், சுயவிபர குறிப்புடன் கூடிய விண்ணப்பங்களை வரும், 30ம் தேதி மாலை, 05:45 மணிக்குள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
