தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மகளிர் சமுதாயம் உயர்வு பெற கல்வி அவசியம்

மகளிர் சமுதாயம் உயர்வு பெற கல்வி அவசியம்

மகளிர் சமுதாயம் உயர்வு பெற கல்வி அவசியம்


UPDATED : ஜூன் 17, 2026 08:11 PM

ADDED : ஜூன் 17, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 08:11 PM ADDED : ஜூன் 17, 2026 08:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி:
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையில் பூமிதான இயக்க நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நுாற்றாண்டு நிறைவு பாராட்டு விழா நடந்தது.

'பெண்களும் ஆன்மிகமும் சமூக மாற்றமும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு பல்கலை முன்னாள் துணைவேந்தர் பங்கஜம் தலைமை வகித்தார். சங்கரன்கோயில் புத்தபிட்சு லீலாவதி, வேதாரண்யம் கஸ்தூரிபாகாந்தி கன்னியா குருகுல நிர்வாகி வேதாரத்தினம், காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பேசுகையில், “பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் குறித்து சுதந்திர சமுதாயம் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது வேதனை அளிக்கிறது. மகளிர் சமுதாயம் உயர்வு பெற பெண் கல்வி அவசியம்” என்றார்.

முன்னதாக 'சமூக மாற்றத்தில் சத்தியமும் அகிம்சையும்' என்ற தலைப்பில் இந்திய அறிவியல் நிறுவன விஞ்ஞானி வேணு மாதவ் கோவிந்த் பேசினார். பேராசிரியர் பழனித்துரை ஒருங்கிணைத்தார். எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் ரவி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us