தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய கல்வி முறையால் குழந்தைகளுக்கு நெருக்கடி: ராகுல்

இந்திய கல்வி முறையால் குழந்தைகளுக்கு நெருக்கடி: ராகுல்

இந்திய கல்வி முறையால் குழந்தைகளுக்கு நெருக்கடி: ராகுல்


UPDATED : ஜூன் 18, 2026 10:55 AM

ADDED : ஜூன் 18, 2026 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2026 10:55 AM ADDED : ஜூன் 18, 2026 11:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடா:
“இந்தியாவின் கல்வி முறையால் நமது குழந்தைகளுக்கு நெருக்கடி, அழுத்தம் ஏற்படுகிறது,” என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் கூறியதாவது:

இது அரசியல் கூட்டம் கிடையாது. இக்கூட்டத்தில் பா.ஜ., காங்கிரஸ் , அரசியல் அல்லது தேர்தல் குறித்து பேச மாட்டேன். அது பற்றி ஒரு வார்த்தை கூட என் வாயில் இருந்து வராது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்ட போது, லட்சக்கணக்கான மக்களுடன் கலந்துரையாடினேன். அவர்களிடம் நீங்கள் என்ன ஆக வேண்டும் என கேட்டேன். டாக்டர்கள், பொறியாளர்கள், ஐ.ஏ.எஸ்., வழக்கறிஞர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என தெரிவித்தனர். ஆறாவதாக ஒன்றும் வரவில்லை.

நமது கல்வி அமைப்பு ஏன் இந்த 5 வாய்ப்களை மட்டும் வழங்குகிறது. நமது குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாததே நமது கல்வி அமைப்பில் உள்ள குறைபாடு. அவர்கள் விரும்பும் வாய்ப்பை நாம் நிறைவேற்றவில்லை.

இந்த நிகழ்ச்சி துவங்கிய பிறகு, கல்வி அமைப்பு குறித்து சிந்திக்க துவங்கினேன். அரசின் கல்வித்துறை ஏன் முடிவுக்கு வருகிறது. தனியார் கல்வி அமைப்பு ஏன் செலவு அதிகம் ஆகிறது.

இந்தியாவின் கல்வி அமைப்பு அதன் குழந்தைகளுக்கு அழுத்தம், நெருக்கடி மன உளைச்சலை கொடுப்பதுடன் அவர்களை ஒடுக்குகிறது. இந்த கூட்டத்தில் , நாட்டில் இருக்கும் குழந்தைகள் யாரும் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என்பதை உறுதி செய்ய ஒவ்வொருவரும் முன் வர வேண்டும். இது அரசியல் கூட்டம் கிடையாது. இது, இந்தியாவின் அரசியல் அமைப்பில் உள்ள தவறு. இது, அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை விவாதிக்கும் கூட்டம்.

இவ்வாறு ராகுல் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us