தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகளின் தேசிய கருத்தரங்கு

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகளின் தேசிய கருத்தரங்கு

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகளின் தேசிய கருத்தரங்கு


UPDATED : ஜூன் 19, 2026 06:08 PM

ADDED : ஜூன் 19, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2026 06:08 PM ADDED : ஜூன் 19, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி மற்றும் சென்னை பையனுாரில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகளின் தடய அறிவியல் பிரிவு சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன் வழிகாட்டுதலின்படி, சேலம் கல்லுாரி வளாகத்தில் நடந்த இரண்டு நாள் கருத்தரங்கில் கல்லுாரியின் டீன் செந்தில்குமார் வரவேற்றார்.

தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் பாரி, சென்னை டி.என்.ஏ., பிரிவின் அறிவியல் அதிகாரி உஷாராணி, விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் மூத்த அறிவியல் அலுவலர் வெங்கடேஷ், பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல் புள்ளி விவர நிபுணர் மற்றும் தடய அறிவியல் உளவியலாளர் மெபின் வில்சன் தாமஸ் மற்றும் தர்மபுரி மண்டல தடய அறிவியல் ஆய்வகத்தின் இளநிலை அறிவியல் அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளின் உரையாற்றினர்.

இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான பட விளக்க காட்சி போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லுாரியின் தடய அறிவியல் பிரிவின் பொறுப்பாளர் ராஜஸ்ரீ, உதவி பேராசிரியர்கள் அமிதா, ஜோசப்பின் எலிசபெத் ஜாய், முகமது ஜஹிம், மெர்சி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us