தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமூகநீதி மாணவர் விடுதிக்கு பாதுகாவலர் நியமிக்க வலியுறுத்தல்

சமூகநீதி மாணவர் விடுதிக்கு பாதுகாவலர் நியமிக்க வலியுறுத்தல்

சமூகநீதி மாணவர் விடுதிக்கு பாதுகாவலர் நியமிக்க வலியுறுத்தல்


UPDATED : ஜூலை 09, 2026 12:20 PM

ADDED : ஜூலை 09, 2026 12:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 12:20 PM ADDED : ஜூலை 09, 2026 12:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்:
திருப்போரூரில், மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக 'சமூகநீதி' விடுதிக்கு பாதுகாவலர் நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்போரூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், அருகில் உள்ள அரசு விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். மேலும் ஆதிதிராவிடர் துறை சார்பில், 'சமூகநீதி விடுதி' செயல்பட்டு வருகிறது. இதில், வார்டன், சமையலர், ஒரு தூய்மை பணியளார் பணி செய்கின்றனர்.

ஆனால், ஒரு சில மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி பயில்கின்றனர். 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பதில்லை. தங்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள், மதிய உணவுக்கு மட்டும் விடுதிக்கு வந்து செல்கின்றனர். ஏற்கனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில், சில பகுதிகளில் மாணவர்கள் வராததால் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டி பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த விடுதிக்கு பாதுகாவலர் இல்லை. இதனால், மாணவர்கள் தங்கி பயில தயங்குகின்றனர். அருகில் மருத்துவ வசதிகள் இல்லை எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த விடுதி வார்டன் கூடுதலாக பாலுார், திருக்கழுக்குன்றம் விடுதியை கவனித்து வருகிறார்.

எனவே, விடுதியில், மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக, பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி, பாதுகாவலர் நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us