UPDATED : ஆக 28, 2026 07:27 PM
ADDED : ஆக 28, 2026 07:28 PM
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் சரக அளவிலான 2026 - 2027ம் ஆண்டிற்கான தடகளம் மற்றும் விளையாட்டு போட்டிகள், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தது.
நடுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமார் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., மதன்குமார், போட்டிகளை துவக்கி வைத்தார்.
சரக அளவிலான பல்வேறு போட்டிகளில் பல பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சிறப்பாக விளையாடி, அதிக புள்ளிகளை குவித்த காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நடுப்பையூர் பள்ளி பி.டி.ஏ., தலைவர் சின்னராஜ், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் பையூர் ரவி, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
