தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப் பள்ளி மாணவர் தமிழக அணிக்கு தேர்வு

அரசுப் பள்ளி மாணவர் தமிழக அணிக்கு தேர்வு

அரசுப் பள்ளி மாணவர் தமிழக அணிக்கு தேர்வு


UPDATED : செப் 22, 2026 12:18 PM

ADDED : செப் 22, 2026 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 12:18 PM ADDED : செப் 22, 2026 12:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, 8ம் வகுப்பு மாணவர் விகுன் குமார், 14. இவர், திருச்சி மாவட்டம், தொட்டியம் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் தமிழக அணியின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த தமிழக ஹேண்ட் பால் போட்டியில் சிறப்பாக விளையாடி, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான தமிழக ஹேண்ட் பால் அணியில் இடம் பெற்றார்.

கோவை மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவர் விகுன் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், அக்., 27ம் தேதி மத்திய பிரதேசத்தில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில், தமிழக அணியில், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடுகிறார்.

தேர்வு செய்யப்பட்ட மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் தனக்குமார், சுதா உள்ளிட்ட ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.





தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us