UPDATED : அக் 14, 2026 06:10 PM
ADDED : அக் 14, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
சேலம்:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப் - 4 தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சேலம், கோரிமேடில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இலவச பயிற்சி வகுப்பு, இன்று காலை, 10:00 மணிக்கு தொடங்குகிறது.
அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் வகுப்பு நடத்தப்படுகிறது. அடிக்கடி மாதிரித்தேர்வு நடத்தி, உடனுக்குடன் மதிப்பெண் வெளியிடப்படும் என, சேலம் கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
