தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலை வளாகத்தில் ஆய்வகத்தின் ரசாயன கழிவுகள்

வேளாண் பல்கலை வளாகத்தில் ஆய்வகத்தின் ரசாயன கழிவுகள்

வேளாண் பல்கலை வளாகத்தில் ஆய்வகத்தின் ரசாயன கழிவுகள்


UPDATED : நவ 04, 2026 03:24 PM

ADDED : நவ 04, 2026 03:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 03:24 PM ADDED : நவ 04, 2026 03:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
வேளாண் பல்கலை வளாகத்தில், ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் அடங்கிய பாட்டில்கள் மற்றும் கொள்கலன்கள் திறந்தவெளியில் சிதறிக் கிடப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

இப்பல்கலையில், உயிர்வேதியியல், தாவர உயிரித் தொழில்நுட்பம், வேளாண் நுண்ணுயிரியல், தாவர நோயியல், மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தாவரங்கள், மண், நுண்ணுயிரிகள் மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கிறது.

வளாகத்தில் புதர் மண்டிய திறந்தவெளியில், பல்வேறு வகையான ரசாயன ஆய்வக கொள்கலன்கள் குவிந்து கிடக்கின்றன. ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் பீனால், நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம். இது தோல் வழியாக உடலுக்குள் ஊடுருவக்கூடியதுடன், தோல் மற்றும் கண்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, இதுபோன்ற ஆய்கவக கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் கையாளுவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

பல்கலை அதிகாரிகளிடம் கேட்டபோது, ' வார இறுதி நாட்களில் தவறுதலாக இங்கு கொட்டியுள்ளனர். அப்படி கொட்டக்கூடாது என அனைத்து துறைகளுக்கும் சர்குலர் அனுபபி உள்ளோம். அந்த இடம் சுத்தம் செய்யப்படும்,' என்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us