தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் படைப்பு அசத்தல்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் படைப்பு அசத்தல்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் படைப்பு அசத்தல்


UPDATED : நவ 11, 2026 01:31 PM

ADDED : நவ 11, 2026 01:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 01:31 PM ADDED : நவ 11, 2026 01:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மடத்துக்குளம்:
காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் சம்பத்குமார் வரவேற்றார்.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 160 மாணவர்கள் தங்கள் படைப்புகளை அற்புதமாக செய்து காட்சிப்படுத்தினர்.

சுற்றுச்சூழல் மாசுபாடு, மழைநீர் சேமிப்பு மின் சிக்கனம் மற்றும் காற்று மாசுபாடு தவிர்த்தல் சாலை பாதுகாப்பு விதிகள் போன்ற தலைப்புகளில், மாணவர்கள் இப்படைப்புகளை உருவாக்கியிருந்தனர்.

பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் மணிவண்ணன், நாகவேணி, கீதா, தங்கமணி நடுவர்களாக செயல்பட்டனர். சிறப்பாக செய்திருந்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

கண்காட்சியை ஆசிரியர்களும், மாணவர்களும் பார்வையிட்டனர். ஆசிரியர் சையது முகமது குலாம் தஸ்தகீர் நன்றி தெரிவித்தார். ஆசிரியர்கள் கார்த்திகேயன், சிவராஜ், ருக்குமணி, உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us