தமிழகம் முழுவதும் நுாலகங்களில் அப்புறப்படுத்தப்படும் போலி நுால்கள்!
தமிழகம் முழுவதும் நுாலகங்களில் அப்புறப்படுத்தப்படும் போலி நுால்கள்!
UPDATED : நவ 12, 2026 11:07 AM
ADDED : நவ 12, 2026 11:12 AM

தமிழகம் முழுவதும் நுாலகங்களில் உள்ள அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலி புத்தகங்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் வைக்கப்பட்ட போலி எழுத்தாளர்களின், 1,510 புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. அதில், அகல் விளக்கு பதிப்பகத்தில் இருந்து, 2.13 லட்சம் மதிப்பில், 40க்கும் மேற்பட்ட தலைப்புகளில், 1,024 புத்தகங்களும், பீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து, 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 46 தலைப்புகளில், 486 புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்ட நுாலகம், பிற நுாலகங்களுக்கு அனுப்பப்பட்ட நுால்களை ஆய்வு செய்ததில், போலி எழுத்தாளர்களின், 200 புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில், 122 நுாலகங்களில், பீனிக்ஸ் பதிப்பகத்தின், 779 நுால்கள், அகல் விளக்கு பதிப்பகத்தில், 914 நுால்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பீனிக்ஸ் பதிப்பகத்திடம், 2024 - 25ம் ஆண்டில் 620 புத்தகங்கள், 2025 - 26ம் ஆண்டில் 328 புத்தகங்கள் என மொத்தம், 948 புத்தகங்கள், 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன.
அகல்விளக்கு பதிப்பகத்திடம், 2025 - 26ம் ஆண்டில் 711 புத்தகங்கள், 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, 91 நுாலகங்களில் இருந்தும் திரும்ப பெற்று சென்னைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் 998 நுால்கள், பீனிக்ஸ் பதிப்பகத்தின் 530 நுால்கள் கைப்பற்றப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. சேலம் உட்பட மேலும் பல மாவட்டங்களிலும், இந்த இரண்டு பதிப்பகங்களின் நுால்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
