தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வகுப்பறைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி

வகுப்பறைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி

வகுப்பறைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி


UPDATED : நவ 15, 2026 01:14 PM

ADDED : நவ 15, 2026 01:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 01:14 PM ADDED : நவ 15, 2026 01:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் முறையை ஊக்குவிக்க, ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த, மாநிலம் முழுவதும் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமச்சீர் பாடத்திட்டம், செயல்வழிக் கற்றல் உள்ளிட்ட முறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், மாணவர்கள், பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், ஏ.ஐ., தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, ஏ.ஐ., கருவிகள் வாயிலாக, பாடங்களை எளிமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுதல், பாடம் சார்ந்த பிரத்யேக கல்வி வீடியோக்களை உருவாக்குதல், ஆசிரியர்களுக்கு 'பிராம்ப்ட் இன்ஜினியரிங்' உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயிற்றுவித்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னையில் நடக்கவுள்ள மாநில அளவிலான பயிற்சி முகாமில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 200 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி பெறும் ஆசிரியர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு சென்று மற்ற ஆசிரியர்களுக்கும் இத்தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்குவர். இதன் வாயிலாக, எதிர்காலத்தில் வகுப்பறை கற்பித்தல் முறையில் மாற்றம் ஏற்பட்டு, நவீன தொழில்நுட்பம் வழியிலான கல்வி மாணவர்களை எளிதில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us