தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தி ஸ்காலர் பள்ளியில் மாணவர் சேர்க்கை தேர்வு

தி ஸ்காலர் பள்ளியில் மாணவர் சேர்க்கை தேர்வு

தி ஸ்காலர் பள்ளியில் மாணவர் சேர்க்கை தேர்வு


UPDATED : நவ 16, 2026 03:29 PM

ADDED : நவ 16, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 03:29 PM ADDED : நவ 16, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி, கோர்க்காட்டில் உள்ள தி ஸ்காலர் பள்ளியில், 2027 - 28ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 1 கல்வி உதவித்தொகை மற்றும் மாணவர் சேர்க்கை தேர்வு நடந்தது.

100 சதவீதம் வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான உயர்கல்வி மற்றும் எதிர்காலக் கல்வி வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், மேல்நிலைக் கல்வியில் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது, நீட் மற்றும் ஜே.இ.இ., ஒருங்கிணைந்த படிப்புகள் உள்ளிட்டவை குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பள்ளியின் தலைவர் பழனிவேலு, தாளாளர் சுரேஷ் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பங்கேற்று, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளக்க வாழ்த்தினர்.

பள்ளியில் தற்போது 2027 - 28ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருவதாகவும், மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்குத் தனித்தனி விடுதி வசதிகள் உள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விவரங்களுக்கு 99434 87999, 97890 02769, 98942 57456 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us