தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்தல் கல்வியறிவு: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

தேர்தல் கல்வியறிவு: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

தேர்தல் கல்வியறிவு: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு


UPDATED : நவ 28, 2026 01:39 PM

ADDED : நவ 28, 2026 01:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 01:39 PM ADDED : நவ 28, 2026 01:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
மாணவர்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் கல்வியறிவு தொடர்பாக வினாடி வினா, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் தாலுகா அளவிலான போட்டியில் பங்கேற்றனர். தாலுகா அளவில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.

மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் க.புதுப்பட்டி எஸ்.பி.எம்., ஜெய் டெக் பள்ளி லோக் தர்ஷ்னா, முதலிடமும், கட்டுரைப் போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திக் முதலிடமும் வென்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஆர்.ஓ., ரம்யா தேவி பரிசு வழங்கினார். தேர்தல் தாசில்தார் மருதுபாண்டி போட்டிகளை ஒருங்கிணைத்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us