தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வியில் ஐ.டி., கேரளாவின் புதிய முயற்சி

கல்வியில் ஐ.டி., கேரளாவின் புதிய முயற்சி

கல்வியில் ஐ.டி., கேரளாவின் புதிய முயற்சி


UPDATED : டிச 27, 2010 12:00 AM

ADDED : டிச 27, 2010 05:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2010 12:00 AM ADDED : டிச 27, 2010 05:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த வாரம் கேரளப் பள்ளிகளில் அந்த மாநில அரசு ஐ.டி., அட் எஜூகேஷன் என்னும் புதிய முயற்சி ஒன்றை துவங்குகிறது. பள்ளி மாணவர்களுக்கு என்ன மாதிரியான ஐ.டி., பயிற்சி தேவையோ அதைத் தருவதே இதன் நோக்கமாகும். அதற்கேற்ப பயிற்சித் திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையான நோக்கமாக அந்த மாநில கல்வித் துறையில் அனைத்துமே இ கவர்னென்ஸ் எனப்படும் எலக்ட்ரானிக் நடைமுறைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படவுள்ளன. சுவீடனின் ஸ்டாக்ஹோம் விருதை கேரளாவின் இந்தப் புதிய முயற்சி  இந்த ஆண்டு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 14 மாவட்டங்களில் உள்ள 750 மையங்களில் இந்த சிறப்பு ஐ.டி., பயிற்சியானது தரப்படவுள்ளது.


கடினமான கணக்குகளை கம்ப்யூட்டர்களைக் கொண்டு எப்படி தீர்ப்பது, இன்டர்நெட்டை பள்ளிகளில் பயன்படுத்துவது எப்படி, சைபர் குற்றங்களை எப்படித் தடுப்பது, இலவச சாப்ட்வேர்களுக்கான அன்றாட அப்டேட்களைப் பெறும் முறை மற்றும் மலையாள மொழியை ஐ.டி., துறையில் திறம்பட செயல்படுத்தும் முறைகள் போன்றவற்றில் இந்த பயிற்சியானது தரப்படும். மேலும் கே.டி.என்., லைவ் மற்றும் அடாசிட்டி போன்ற கிராபிக் சாப்ட்வேர்கள் குறித்தும் மாணவர்கள் அறிமுகம் பெறுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us