UPDATED : ஜன 03, 2011 12:00 AM
ADDED : ஜன 03, 2011 05:41 PM
இதுகுறித்து அவர் கூறியதாவது, "இந்தியாவில் பொறியியல் மாணவர் சேர்க்கை, அமெரிக்காவை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது. இவ்வளவு பொறியியல் பட்டதாரிகளை வைத்து என்ன செய்யப் போகிறோம். அவர்கள் பயிற்சியளிக்கப்படாதவர்கள். அதுபோன்றவர்களால் பயன்கள் எதுவுமில்லை" என்று கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் அவர், "பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே இடங்கள் மிக அதிகம். பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பும் அதேவேளையில், பொருளாதாரம், தத்துவம், தாவரவியல், விலங்கியல், பூகோள அறிவியல் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளிலும் மாணவர் சேர்க்கை அவசியம். இத்துறைகளில் எதிர்காலத்தில் மோசமான ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நேரிடும். பொறியியல் படிப்புகள் என்ற பெயரில், பணம் சம்பாதிக்கும் வெறியானது வரும் நாட்களில் இல்லாமல் போகும் என்று நம்புகிறேன்" என்றார்.
இதுகுறித்து மத்திய மனிதவளத் துறை தங்களிடம் ஆலோசிக்கவில்லையா என்று கேட்டதற்கு, "கல்வி அமைச்சகத்தின் முடிவில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை" என்று பதிலளித்தார்.
