தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெருமையை தக்கவைக்க முடியவில்லை: அமர்த்யா சென் ஆதங்கம்

பெருமையை தக்கவைக்க முடியவில்லை: அமர்த்யா சென் ஆதங்கம்

பெருமையை தக்கவைக்க முடியவில்லை: அமர்த்யா சென் ஆதங்கம்


UPDATED : ஜன 06, 2011 12:00 AM

ADDED : ஜன 06, 2011 03:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2011 12:00 AM ADDED : ஜன 06, 2011 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பொருளாதார மேதை அமர்த்யா சென் இவ்வாறு தனது ஏக்கத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். உலகின் மிகப் பழமையானதும், கல்வி உலகின் சொர்க்கமாகவும் விளங்கிய நாளந்தா பல்கலைக்கழகத்தை பழைய சிறப்புடன் மீட்டமைப்பது பெரும் சவாலான பணிதான் என்றாலும், முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று கூறினார்.


மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, "நாளந்தா பல்கலைக்கழகத்தை மறுநிர்மாணம் செய்யும் முயற்சிகளின் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக செயல்பாட்டுக் குழுவின் தலைவராக பொறுப்பு வகிப்பதால், அழிந்து 800 வருடங்களுக்கும் மேலாகும் ஒரு பல்கலையை அதன் பழைய பெருமைகளுடன் மறுநிர்மாணம் செய்வதில் இருக்கும் சவாலை நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் எங்கள் பயணத்தை நாங்கள் சரியாகவே துவக்கியுள்ளோம். இந்த மாநாட்டில் நான் கலந்துகொண்டதன் மூலமாக, நாளந்தா பல்கலையில் பின்பற்றப்பட்ட சீரிய அறிவியல் முறைகளை மீண்டும் நினைவிற்கு கொண்டுவரும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. இந்த உத்வேகமானது, புதிய நாளந்தாவை அமைக்கும் முயற்சிக்கு துணைபுரியும். இந்த மாபெரும், உன்னதமான முயற்சியில் இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன.


பீகாரின் நாளந்தாவில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டு செயல்படத்தொடங்கிய இப்பல்கலை, அன்றைய ஒட்டுமொத்த உலகிலும் பெரும் புகழ்பெற்ற முதன்மையான கல்வி நிறுவனமாக விளங்கியது. பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு மாணவர்கள் வந்து படித்தனர். ஐரோப்பாவின் பழைய பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் போலோக்னோ பல்கலையானது, நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு 600௦௦ ஆண்டுகள் பின்புதான் உருவானது.


எகிப்து தலைநகரம் கெய்ரோவில் கி.பி.970 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அல்-அசார் பல்கலையை விட, நாளந்தா 500 வருடங்கள் பழமையானது. முகமது கோரி இந்தியாவில் காலூன்றிய பிறகு, அவரது தளபதிகளில் ஒருவரான பக்தியார் கில்ஜி, கி.பி. 1193 ஆம் ஆண்டு வங்கத்தின் மீது தனது கவனத்தை திருப்பியபோது, நாளந்தா பல்கலை காட்டுமிராண்டித்தனமாக சிதைக்கப்பட்டு, அதன் விலைமதிப்பில்லாத நூலகம் எரிக்கப்பட்டது. கல்வி உலகம் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்தது.


நாளந்தாவில் மருத்துவம், பொது சுகாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, மதவியல், வரலாறு, சட்டம் மற்றும் மொழியியல் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. பழைய நாளந்தாவின் அறிவியல் பாரம்பரியத்தை நினைவிற்கு கொண்டுவரும் நேரமிது. அந்த ஊக்கமே புதிய நாளந்தாவிற்கான பணிகளை செம்மைப்படுத்தி, வரலாறு, மொழியியல், மத ஒப்பீடுகள், சமூக அறிவியல்கள், சர்வதேச உறவுகள், மேலாண்மை மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவற்றை உறுதிசெய்ய துணைபுரியும் என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us