தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமப்புற மருத்துவ படிப்பை கடுமையாக எதிர்க்கும் ஐ.எம்.ஏ.

கிராமப்புற மருத்துவ படிப்பை கடுமையாக எதிர்க்கும் ஐ.எம்.ஏ.

கிராமப்புற மருத்துவ படிப்பை கடுமையாக எதிர்க்கும் ஐ.எம்.ஏ.


UPDATED : ஜன 21, 2011 12:00 AM

ADDED : ஜன 21, 2011 01:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2011 12:00 AM ADDED : ஜன 21, 2011 01:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐதராபாத்தில் இந்த மாதம் 12-13 ம் தேதிகளில் நடந்த மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய அரசு மேற்கண்ட முடிவை எடுத்தது. மத்திய அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்க்கும் ஐ.எம்.ஏ. வட்டாரங்கள், அதுகுறித்து கூறுவதாவது, "கிராமப்புற மக்களுக்கான மருத்துவர்களை அதிகளவில் உருவாக்கும்பொருட்டு, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த முடிவு அம்மக்களின் நிலையை மேலும் மோசமாக்கும். நகர்புற மக்கள் நல்ல தரமான மருத்துவ வசதியை பெரும் நிலையில், கிராமப்புற மக்களுக்கு மட்டும் இதுபோன்ற அரைகுறை மருத்துவர்களை வழங்குவது எந்த விதத்தில் நியாயம்?


மத்திய அரசின் இந்த முடிவானது, அனைத்து குடிமக்களுக்கும் சமமான அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்டம் 14 வது பிரிவுக்கு எதிரானதாகும். மேலும் இது 1956 ம் ஆண்டு இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டத்தையும் (பிரிவு 15-2) மீறுவதாக உள்ளது. இந்திய மருத்துவ பதிவேட்டின் கீழ், ஒருவர் மருத்துவராக பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச தகுதி எம்.பி.பி.எஸ். பட்டமாகும்.


இந்திய மருத்துவ கவுன்சில் சட்டமானது, ஒரு தனிநபரோ, அமைப்போ அல்லது மாநில அரசோ, மருத்துவ கல்விக்காகவோ அல்லது மருத்துவர்களை உருவாக்கும் பயிற்சிக்காகவோ துணை நிலையிலான எந்த புதிய மருத்துவ படிப்புகளையும் ஆராம்பிக்க கூடாது என்று தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிராமங்களில் மருத்துவ சேவையை தரப்படுத்தி அதிகரிக்க வேண்டுமெனில் அதற்கு வேறு பல வழிகள் உள்ளன. கிராமப்புறங்களில் அதிக மருத்துவ கல்லூரிகளை திறத்தல், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் தேர்வில் முன்னுரிமை மற்றும் சிறப்பு கிராமப்புற சம்பளம் போன்ற சலுகைகளை அறிவித்து, படிப்பு முடிந்து வெளிவரும் மாணவர்கள் ஒரு வருடம் கட்டாயமாக கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறைகளை கொண்டு வரலாம். ஆனால் இத்தகைய சாதகமான வழிமுறைகளுக்கு பதிலாக மத்திய அரசு விரும்பத்தகாத வழியில் செல்கிறது.


இந்த சிக்கல் சம்பந்தமாக ஐ.எம்.ஏ. ஜனாதிபதியிடம் முறையிட முடிவு செய்துள்ளது. மேலும் ஜனவரி 22 ம் தேதி நாடு தழுவிய அளவில் தர்ணா மற்றும் எதிர்ப்பு போராட்டங்களையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய, கிராமப்புறங்களுக்கான மருத்துவ படிப்பு சம்பந்தமான எங்களின் சந்தேகங்கள் மற்றும் மருத்துவத்துறை எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் அடங்கிய ஒரு விரிவான அறிக்கையை, நாடு முழுவதுமுள்ள அரசு சார்ந்த மருத்துவ துறைகளிடம் அளிக்க உள்ளோம்" என்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us