தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக சாதனைக்காக ஓசூரில் மெகா ஓவியப் போட்டி

உலக சாதனைக்காக ஓசூரில் மெகா ஓவியப் போட்டி

உலக சாதனைக்காக ஓசூரில் மெகா ஓவியப் போட்டி


UPDATED : ஜன 21, 2011 12:00 AM

ADDED : ஜன 21, 2011 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2011 12:00 AM ADDED : ஜன 21, 2011 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர், சிப்காட் மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில், ஒரே நேரத்தில் 6,300 மாணவர்கள் பங்கேற்ற, ‘மெகா’ ஓவியப் போட்டி, லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவும் இந்த போட்டி பரிந்துரைக்கப்பட்டது.


கேமலின் கம்பெனி சார்பில், 1971 முதல், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் மத்தியில், ஓவியப் போட்டியை ஊக்குவிக்கும் வகையில், ஓவியக் கண்காட்சி மற்றும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, ஓசூர் சிப்காட்டில், மகரிஷி வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளியில் கேமலின் கம்பெனி, மகரிஷி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர், பொதுமக்கள் மத்தியில், புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மெகா ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.


கின்னஸ் மற்றும் லிம்கா புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில், பள்ளி மைதானத்தில் 6,300 மாணவர்கள் ஓவியப் போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று 6,300 மாணவர்கள், பள்ளி மைதானத்தில், ‘சேவ் எர்த்’ என்ற ஆங்கில எழுத்துப்படி அமர வைத்து, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ, மாணவியரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.


இதற்கு முன், 1997ல், கேமலின் மூலம் நடத்தப்பட்ட ஓவியப் போட்டி தான் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்று, சாதனையாக இருந்தது. நேற்று ஒரே நேரத்தில், 6,300 மாணவர்கள் பங்கேற்றதால், முந்தைய லிம்கா சாதனை முறியடிக்கப்பட்டது. ‘மெகா’ ஓவியப் போட்டி, இந்திய அளவில் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us