தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை தேவை’

‘வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை தேவை’

‘வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை தேவை’


UPDATED : பிப் 04, 2011 12:00 AM

ADDED : பிப் 04, 2011 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2011 12:00 AM ADDED : பிப் 04, 2011 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: அமெரிக்காவில் விசா இல்லாமல் தங்கியிருந்த மாணவர்களின் காலில் கண்காணிப்பு கருவியை பொருத்தியது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க தூதரக அதிகாரியின் செயல் வருத்தமளிப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள திரி வேலி பல்கலைக் கழகத்தில், இந்திய மாணவர்கள் பலர் படித்தனர். இவர்கள் போலி விசாவில் அங்கு தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த பல்கலைக் கழகம் மூடப்பட்டது. இது தொடர்பான விசாரணை முடியும் வரை மாணவர்களின் நடமாட்டத்தை அறிவதற்காக அவர்களின் காலில், ரேடியோ அதிர்வலை கொண்ட கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.


இது குறித்து ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜூலியட் உர் குறிப்பிடுகையில், ‘போலி விசாவில் தங்கி படித்த மாணவர்களை முறைப்படி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஆனால், அதற்கு பதில், அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க காலில் ரேடியோ அதிர்வலை கருவி பொருத்தப்பட்டது.


அமெரிக்காவில் குடித்துவிட்டு கார் ஓட்டும் நடிகர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டால் அவர்களை கைது செய்வதற்கு பதிலாக காலில் ரேடியோ அதிர்வலை கருவியை கட்டி வைப்பர். இதே நடைமுறை தான் இந்திய மாணவர்களின் விஷயத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் இதை விரும்பாவிட்டால், ஆரஞ்சு நிற உடையை அணிவித்து சிறையில் அடைக்கப்படுவர்’ என்றார்.


அமெரிக்க தூதரக அதிகாரி ஜூலியட்டின் இந்த கருத்து வருத்தம் அளிப்பதாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘இந்த விஷயத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனினும் வெளிநாட்டில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையோடு தாங்கள் படிக்கும் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us