தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ.சி.டி.இ. விதியை எதிர்க்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்

ஏ.ஐ.சி.டி.இ. விதியை எதிர்க்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்

ஏ.ஐ.சி.டி.இ. விதியை எதிர்க்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்


UPDATED : பிப் 08, 2011 12:00 AM

ADDED : பிப் 09, 2011 01:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2011 12:00 AM ADDED : பிப் 09, 2011 01:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்கள், மாணவர்களை தேர்வுசெய்ய தனி நுழைவுத்தேர்வுகள் மற்றும் ஜி.டி/பி.ஐ. போன்றவற்றை நடத்தக்கூடாது என்று கடந்தாண்டு டிசம்பரில் ஒரு புதிய விதிமுறையைக் கொண்டு வந்தது. இந்த விதிமுறையை எதிர்த்து தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாநில அரசுகளிடம் புகார்செய்ய முடிவெடுத்துள்ளன.



எம்.பி.ஏ. மற்றும் பி.ஜி.டி.எம். படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள், தனியார் கல்வி நிறுவனங்களின் இத்தகைய தன்னிச்சையான செயல்பாடுகளால் அதிக பாதிப்பிற்கு உள்ளாவார்கள் மற்றும் ஜி.டி/பி.ஐ. போன்றவைகளில் கலந்துகொள்ள அவர்கள் அதிகம் செலவுசெய்து அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்பன போன்ற வாதங்களை ஏ.ஐ.சி.டி.இ. முன்வைத்தது.



ஆனால் இதுபோன்ற தனித்தனி நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்வதன் மூலம் மேலாண்மை படிப்புகளின் தரம் குறைந்துவிடும். அதுமட்டுமில்லாமல், தனியார் கல்வி நிறுவனங்களின் சுயாட்சியில் தலையிடுவதாகவும் இந்த புதிய விதிமுறை உள்ளது என்று தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே அந்த நிறுவனங்கள் இந்த புகார் தெரிவிக்கும் முடிவை எடுத்துள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us