பெஸ்ட் வெஸ்டர்ன் இந்தியாவின் ஹோட்டல் மேலாண்மை படிப்புகள்
பெஸ்ட் வெஸ்டர்ன் இந்தியாவின் ஹோட்டல் மேலாண்மை படிப்புகள்
UPDATED : பிப் 10, 2011 12:00 AM
ADDED : பிப் 10, 2011 12:13 PM
அ நிறம் | அளவு
உலகளவில் பெயர்பெற்ற பெஸ்ட் வெஸ்டர்ன் இந்தியா என்ற ஹோட்டல் நிறுவனம், ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் துறைக்கான ரஞ்சிதா கல்வி நிறுவனத்துடன்(ஆர்.ஐ.எச்.சி) இணைந்து ஒரிசா தலைநகர் புவனேஷ்வரில், ஹோட்டல் மேலாண்மை மற்றும் பயிற்சிக்கான பெஸ்ட் வெஸ்டர்ன் நிலையத்தை அமைக்க உள்ளது.
இதன் முதல் செஷன் இந்தாண்டு பிப்ரவரியில் தொடங்குகிறது. ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷனில் 3 வருட பி.எஸ்சி படிப்பும், அக்கமொடேஷன் ஆபரேஷன் அண்ட் மேனேஜ்மென்ட் -இல் முதுநிலை டிப்ளமோவும், புட் புரொடக்ஷனில் கிராப்ட்மேன்ஷிப் படிப்பும், புட் பெவரேஜ் சர்விஸ் மற்றும் ஹோட்டல் என்ட்ரி பிரினிரியல் ஆகியவற்றில் பேட்டிசரி அண்ட் கிராப்ட்மேன்ஷிப் படிப்பும் இந்த கல்வி மையத்தில் வழங்கப்படும்.
