UPDATED : பிப் 11, 2011 12:00 AM
ADDED : பிப் 11, 2011 06:01 PM
புதிய சிஸ்டத்தின்படி, 2000௦௦௦ உதவி லோகோ பைலட்டுகளுக்கான காலியிடங்களை நிரப்ப ரயில்வே ரெக்ரூட்மென்ட் வாரியம்(ஆர்.ஆர்.பி) மறுதேர்வை நடத்துகிறது.
கடந்த வருடம் ஜூன் மாதம் நடக்கவிருந்த இந்த தேர்வானது, கேள்வித்தாள்கள் வெளியானதால் ரத்து செய்யப்பட்டது. அந்த விவகாரம் தற்போது சி.பி.ஐ. மூலமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய புதிய தேர்வுகள் மும்பை, நாக்பூர், சோலாப்பூர் மற்றும் ஆஜ்மீர் ஆகிய இடங்களில் நடக்கின்றன. கடந்த வருடம் கேள்வித்தாள் வெளியான சம்பவத்திலிருந்து, அதுபோன்று மீண்டும் நடக்காமலிருக்க தனது தேர்வு முறையையே ரயில்வே நிர்வாகம் மாற்றியுள்ளது. இந்த புதிய முறையின் மூலம்தான் வரும் ஞாயிற்றுக்கிழமை மறுதேர்வு நடத்தப்படுகிறது.
இந்த புதிய முறையில் எந்த தனிநபரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. முந்தைய தேர்வு முறைகளில் ஆர்.ஆர்.பி. அதிகம் மையப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த புதிய தேர்வு முறையில் ஆர்.ஆர்.பி. பங்களிப்பு மிகவும் குறைந்துவிட்டது. மாறாக மண்டல ரயில்வேக்கள் மற்றும் பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
