தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தோ திபெத்திய எல்லைப் படையில் பணி வாய்ப்பு

இந்தோ திபெத்திய எல்லைப் படையில் பணி வாய்ப்பு

இந்தோ திபெத்திய எல்லைப் படையில் பணி வாய்ப்பு


UPDATED : மார் 01, 2011 12:00 AM

ADDED : மார் 01, 2011 03:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 01, 2011 12:00 AM ADDED : மார் 01, 2011 03:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு போலீஸ் போர்ஸ் எனப்படும் ஐ.டி.பீ.பி., அடிப்படையில் மலையேற்றம் தொடர்புடைய பணியாகும். இமய மலைப் பகுதியில் ஏற்படும் பேரழிவுகளிலிருந்து மீட்புப் பணிகளில் இந்த அமைப்பே முதலில் ஈடுபடுவதும் குறிப்பிடத் தக்கது. இந்தப் படையில் பார்மசிஸ்ட் 48 மற்றும் ரேடியோகிராபர் பிரிவில் 2 என்று மொத்தம் 50 துணை ஆய்வாளர் களைப் பணியில் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண், பெண் என்ற இரு பாலரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு
இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் மேலே கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி
ஐ.டி.பீ.பி.,யின் பார்மசிஸ்ட் பிரிவில் துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி, பார்மசி படிப்பில் டிப்ளமோ ஆகியவற்றுடன் பார்ம சிஸ்டாக பதிவு செய்திருப்பதும் தேவைப்படும். ரேடியோகிராபர் பிரிவு துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மெட்ரிகுலேசன் படிப்பில் தேர்ச்சி, ரேடியோ டயக்னாசிஸ் பிரிவில் டிப்ளமோ தேவை. இந்தத் துறையில் முன்அனுபவம் இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.


உடல் தகுதி
இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் குறைந்த பட்சம் 170 செ.மீ., உயரமும் இதற்கு நிகரான எடையும், குறைந்த பட்ச மார்பளவு 80 செ.மீ.,யும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்த பட்சம் 150 செ.மீ., உயரமும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.


தேர்ச்சி முறை
ஐ.டி.பீ.பி.,யின் துணை ஆய்வாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவப் பரிசோதனை, நேர்காணல் என்ற பல நிலைகளில் தேர்ச்சி முறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/ கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பங்களை 15.03.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். அனுப்பும் கவரின் மீது தவறாமல்"Application for the post of ___________(Post Name )" என்று குறிப்பிட வேண்டும். பார்மசிஸ்ட் பிரிவிற்கும் ரேடியோகிராபர்பிரிவிற்கும் விண்ணப்பங்களை அனுப்ப தனித் தனியான முகவரிகள் உள்ளன. விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களை இணைய தளத்தைப் பார்த்து அறியவும்.


முகவரி
பார்மசிஸ்ட் பிரிவு:
DIG, SHQ (DDN), ITBP,
PO & Seemadwar,
Distt - Dehradun (UKD).


ரேடியோகிராபர் பிரிவு:
DIG, SHQ (Bareilly),
ITBP, PO - Bukhara Camp,
Bareilly (UP).


விண்ணப்பங்களை அனுப்ப இறுதி நாள்: 15.03.2011


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us