அகில இந்திய பார் தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்படுமா?
அகில இந்திய பார் தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்படுமா?
UPDATED : மார் 09, 2011 12:00 AM
ADDED : மார் 09, 2011 11:59 AM
அகில இந்திய பார் தேர்வை மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம்(எம்.எச்.ஏ.ஏ) கோரியுள்ளது.
கடந்த மார்ச் 6 ம் தேதி நடக்கவிருந்த இந்த தேர்வு, சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தால் மார்ச் 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் மாணவர்களும், வழக்கறிஞர்களும் ஒரு பொருத்தமான அமைப்பிடம் சரியான நிவாரணம் பெற வாய்ப்பை வழங்கும் பொருட்டு அந்த தேர்வை மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்க, இந்திய பார் கவுன்சிலிடம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த சங்கம் மேலும் கூறுவதாவது, "குறிப்பாக, ஒருவரை வழக்கறிஞராக ஆவதற்கு அனுமதித்தப் பிறகு, தேர்வானது அடிப்படை அற்றதாக இருக்கிறது. ஒருவர் வழக்கறிஞராக பயிற்சி பெறுவதற்கான அனுமதியைப் பெற இதுபோன்ற ஒரு தேர்வை எழுத செய்வது நியாயமில்லாதது. இதுபோன்ற தேர்வுகளை எழுதாத பல பேர் தற்போது வெற்றிகரமான வழக்கறிஞர்களாக உள்ளனர்.
மேலும் பலர் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும் உள்ளனர். இதுபோன்ற புதிய நிபந்தனைகள் அரசியல் சட்டத்தின் பிரிவு 19(1) -ஐ மீறுவதாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
