தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு பற்றி அறிய வேண்டுமா?

எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு பற்றி அறிய வேண்டுமா?

எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு பற்றி அறிய வேண்டுமா?


UPDATED : மார் 17, 2011 12:00 AM

ADDED : மார் 17, 2011 02:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2011 12:00 AM ADDED : மார் 17, 2011 02:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏ.ஐ.எம்.ஏ. - மேட்
மேட் என்றாலே நன்கு அறியப்பட்ட தேர்வாகும். அனைத்திந்திய மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் கீழ் இயங்கும் மேனேஜ்மென்ட் சர்வீஸ் மையம் (சி.எம்.எஸ்.) ஒவ்வொரு ஆண்டும் 4 முறை (பிப்., மே, செப்., டிச.,) நடத்தும் இந்த தேர்விற்கான விண்ணப்பத்தினை ரூ.1,050/ கட்டணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.


கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


தேர்ந்தெடுக்கும் முறை : மேட் தேர்வில் இரண்டு முறைகள் உள்ளன. ஆப்லைன் டெஸ்ட் அல்லது கம்ப்யூட்டரில் நடத்தப்படும் டெஸ்ட். இரண்டுமே இரண்டரை மணி நேரம் நடத்தப்படும். மாணவர்கள் இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். மொழிப் புலமை, கணிதத் திறமை, டேட்டா அனலைசஸ், அறிவுத் திறன் மற்றும் சமயோஜிதத் திறன், இந்திய-சர்வதேச சுற்றுச்சூழல் அறிவு என 5 கேள்வித்தாள்கள் உண்டு. ஒவ்வொன்றும் 40 கேள்விகளைக் கொண்டிருக்கும்.


மேட் மதிப்பெண்ணை ஏற்றுக் கொள்ளும் வேறு பல கல்வி நிலையங்களிலும், மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.


மேலும் விவரங்கள் அறிய www.aima-ind.org/mat.aspx


ஏ.டி.எம்.ஏ.
ஏ.டி.எம்.ஏ. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும். சுமார் 140 இதர எம்.பி.ஏ. மையங்கள் ஏ.டி.எம்.ஏ.யில் பெறும் மதிப்பெண்ணை தங்களது மேலாண்மை வகுப்பு சேர்க்கைக்கு ஏற்றுக் கொள்கின்றன. ஏ.டி.எம்.ஏ. விண்ணப்பப் படிவம் ரூ.950 ஆகும்.


கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


தேர்வு முறை : அனலைடிகல், வெர்பல் மற்றும் லாஜிகல் ரீசனிங் என்ற பிரிவுகளின் கீழ் 170 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்படும். மொத்தமாக 3 மணி நேரம் கொடுக்கப்படும். தேர்வு முடிவின் அடிப்படையில் சேர்க்கைக்கு அழைக்கப்படுவார்கள்.


மேலும் விவரங்கள் அறிய www.atma-aims.org


கேட் - காமன் அட்மிஷன் டெஸ்ட் (சி.ஏ.டி.)
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் தனது பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க காமன் அட்மிஷன் டெஸ்ட்டை நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மேனேஜ்மென்ட் ப்ரோக்ராம் பிரிவுகளில் 2,700 இடங்களுக்கு, மாணவர்களை சேர்க்க இந்த தேர்வை நடத்துகிறது. மேலும் 165 கல்வி நிலையங்களும் தங்களது மாணவர் சேர்க்கைக்கு இந்த கேட் தேர்வு முடிவையே ஏற்றுக் கொள்கிறது.


கேட் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். விண்ணப்பப் படிவமும், தகவல் புத்தகமும் ரூ.1,400க்கு கிடைக்கும்.


கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கும் முறை : கம்ப்யூட்டர் அடிப்படையில் இரண்டரை மணி நேரம் நடத்தப்படும் தேர்வாகும் இது. டேட்டா இன்டர்பிரிடேஷன் அன்ட் லாஜிகல் ரீசனிங், குவான்டிடேட்டிவ் அபிலிடி, வெர்பல் அபிலிடி மற்றும் காம்பிரிஹென்சன் ஆகிய பிரிவுகளின் கீழ் அப்ஜெக்டிவ் கேள்விகள் கேட்கப்படும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டியது அவசியம். ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி கட்-ஆப் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 அல்லது 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகடிவ் மதிப்பெண் உண்டு.


தேர்வு முடிவுகள் கேட் இணையதளத்தில் வெளியாகும். ஒவ்வொரு ஐஐஎம்-மும் தனித்தனியாக தாங்கள் தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதத்தை அனுப்பும். மாணவர்களைத் தேர்வு செய்வதில் ஒவ்வொரு ஐஐஎம்-மும் மாறுபடும். கேட்டில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு பிற கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கலாம். அங்கு பல சுற்றுக்களைக் கடந்து சேர்க்கை நடைபெறும்.


மேலும் விவரங்கள் அறிய www.catiim.in


ஐ.பி.எஸ்.ஏ.டி.
பெடரேஷன் ஆப் யூனிவர்சிட்டியால் நடத்தப்படும் ஐபிஎஸ்ஏடி, கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் பட்டமேற்படிப்பு பயில நினைக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. விண்ணப்பப் படிவம் ரூ.1,200க்கு கிடைக்கும். இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் சுமார் 100 மையங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.


கல்வித் தகுதி : ஆங்கில வழியில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.


தேர்ந்தெடுக்கும் முறை : பல்வேறு துறைகளில் மாணவர்களின் திறனை அறியும் வகையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 2 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வின் முடிவுகள் www.ibsat.org என்ற இணையத்தில் வெளியாகும். தனித்தனியாக மாணவர்களுக்கு அவர்களது மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும்.


மேலும் விவரங்கள் அறிய www.ibsat.org


இதன் தொடர்ச்சி வரும் சனிக்கிழமை வெளியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us