தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பறக்கும் படையா - பறக்காத படையா?

பறக்கும் படையா - பறக்காத படையா?

பறக்கும் படையா - பறக்காத படையா?


UPDATED : மார் 19, 2011 12:00 AM

ADDED : மார் 19, 2011 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2011 12:00 AM ADDED : மார் 19, 2011 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் பறந்து சென்று கண்காணிக்க வேண்டிய பறக்கும் படை குழுவினரை, பறக்காத படைகளாக மாற்றியதால், குழுவில் இடம்பெற்ற ஆசிரியர்கள் புலம்பித் தவித்து வருகின்றனர்.


பிளஸ் 2 தேர்வுகளை கண்காணிக்க, 4,000 உறுப்பினர்களைக் கொண்டு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை என்றாலே, ஒரே தேர்வு மையத்தில் இருக்காமல் வெவ்வேறு தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வுப் பணிகளை கண்காணிப்பர். தற்போது நடந்துவரும் பிளஸ் 2 தேர்வில், சென்னையில் வித்தியாசமான காட்சிகள் அரங்கேறி வருகின்றன.


மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி நாகராஜ முருகன், சென்னையில் உள்ள பறக்கும் படைகளை பறக்காத படைகளாக மாற்றியுள்ளார். பறக்கும் படை குழுவினரை ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் தேர்வு முடியும் வரை அங்கேயே இருந்து கண்காணிக்க வேண்டும் என சி.இ.ஓ. உத்தரவிட்டுள்ளார். இதனால் பல்வேறு தேர்வு மையங்களுக்குச் சென்று பரபரப்பாக தேர்வுப் பணிகளை கண்காணிக்க வேண்டிய பறக்கும் படை குழுவினர் ஒரே பள்ளியில் தேர்வு துவங்கியது முதல், முடியும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.


இது குறித்து பறக்கும் படையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது, "ஒரு சில தேர்வு மையங்களில் இரண்டு தேர்வு அறைகள்தான் இருக்கின்றன. இதுபோன்ற மையங்களில் காலை முதல், தேர்வு முடிந்து, விடைத்தாள்களை கட்டி சீல் வைப்பது வரை, நாங்கள் ஒரே பள்ளியில், செக்யூரிட்டி போல் வேலைசெய்ய வேண்டியுள்ளது.


மேலும், இருக்கின்ற இரு அறைகளுக்கு பலமுறை நாங்கள் அணிவகுப்பு செய்வதால், மாணவர்கள் பீதி அடைகின்றனர். பறக்கும் படை குழுக்களின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் தற்போதைய செயல்பாடுகள் இருக்கின்றன" என்று தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us