UPDATED : மார் 20, 2011 12:00 AM
ADDED : மார் 20, 2011 12:58 PM
இது தொடர்பாக அவர் கூறியதாவது, "பிரிட்டனிலிருந்து அதிகளவு மாணவர்கள் இந்தியாவிற்கு படிக்க வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் தற்போது போதுமான அளவு பிரிட்டன் மாணவர்கள் இந்தியாவில் இல்லை. இந்தியாவில் பல சிறந்த கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உள்ளன.
மேலும் சில இந்திய கல்வி நிறுவனங்கள், பிரிட்டன் கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பையும் கொண்டுள்ளன. எனவே இத்தகைய நல்ல சூழலைப் பயன்படுத்தியும் பிரிட்டன் மாணவர்கள் இந்தியாவிற்கு வரலாம். இன்னும் சில வருடங்களில் பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கும், பிரிட்டனுக்கு இந்தியாவிலிருந்தும் மாணவர்கள் படிக்க செல்வது அதிகரிக்கும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு, மைக்ரோபயாலஜி உள்ளிட்ட பாடங்களை பிரிட்டன் மாணவர்கள் படிக்கலாம். பிரிட்டிஷ் கவுன்சிலானது, பிரிட்டனில் படித்த பழைய மாணவர்களின் உலகளாவிய நெட்வொர்க்கை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அது தொடர்பாக ஒரு வலைத்தளத்தையும் நிறுவ திட்டமிடுகிறது" என்றார்.
