தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுத் தேர்வுகளில் கலை, அறிவியல் மாணவர் ஆதிக்கம்

அரசுத் தேர்வுகளில் கலை, அறிவியல் மாணவர் ஆதிக்கம்

அரசுத் தேர்வுகளில் கலை, அறிவியல் மாணவர் ஆதிக்கம்


UPDATED : மார் 26, 2011 12:00 AM

ADDED : மார் 26, 2011 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 26, 2011 12:00 AM ADDED : மார் 26, 2011 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கலை, அறிவியல் படிப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்து அவர் பேசியதாவது : பிளஸ் 2விற்கு பின் தொழிற்படிப்பை தேர்ந்தெடுக்காதவர்களுக்கு கலை, அறிவியல் துறைகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நல்ல கல்லூரியில் பொறியியல், மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைத்தால் நல்லது தான்.


இல்லாவிட்டால் யோசிக்காமல் கலை, அறிவியல் படிப்பை தேர்ந்தெடுக்கலாம். பி.எச்டி. படித்தபின் "போஸ்ட் டாக்டரல்" படிக்கலாம். கலை படித்தவர்கள் டி.லிட்., அறிவியல் படித்தவர்கள் டி.சயின்ஸ் படிக்கலாம். மற்ற படிப்புகளுடன் ஒப்பிடும்போது கல்லூரிகளில் சேர்க்கை மிக எளிது. கல்விக் கட்டணம் குறைவு. மூன்றாண்டுகளில் இளநிலை படிப்பை முடித்துவிடலாம். படிக்கும் போதே பகுதிநேர வேலை பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. மற்ற திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு போதிய நேரமும் கிடைக்கும்.


தொழிற்படிப்பு மாணவர்களுக்கு, பாடங்களைத் தவிர மற்றவற்றில் கவனம் செலுத்த முடியாது. அரசுப் போட்டித் தேர்வுகளில் அதிகளவு வெற்றி பெறுபவர்கள் கலை, அறிவியல் படித்த மாணவர்கள் தான். இளநிலையில் அக்கவுண்டிங், அறிவியல் கணக்கீடுகள், நிறுவனச் சட்டம், இன்சூரன்ஸ், பங்கு சந்தை, வரி தொடர்பான படிப்புகள் நிறைய உள்ளன. படித்து முடித்தவுடன் இதுதொடர்பான நிறுவனங்களில் உடனடி வேலை வாய்ப்பு பெறலாம். சோஷியலாஜி படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெறுவது எளிது.


போலீஸ் நிர்வாகம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, நரம்பு மொழியியல் படிப்புகள் தற்போது மாணவர்களை கவர்கின்றன. பாடங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுக்க முடியாத மாணவர்கள் கூட, அவர்கள் விருப்பம் சார்ந்த காஸ்ட்யூம், பேஷன் டிசைனிங், ஜூவல்லரி, இன்டீரியர் டிசைனிங் துறையை தேர்ந்தெடுக்கலாம்.


வேலைக்குச் செல்ல விரும்பாத பெண்கள் மனை அறிவியல், உணவியல், உணவு அறிவியல் படிப்புகளை தேர்ந்தெடுத்தால் குடும்ப உறுப்பினர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நடிப்பு, விளம்பரம், அனிமேஷன், ஆடியோ, புத்தகம் வெளியிடுதல், நிகழ்ச்சி மேலாண்மை, எடிட்டிங், போட்டோகிராபி, ரேடியோ டெக்னிக், இதழியல் என எண்ணற்ற படிப்புகளும், அது தொடர்பான வேலைகளும் உள்ளன.


பிளஸ் 2 முடித்த உடனேயே ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்தபின் பி.எட்., படிக்கலாம். பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி, பயோ பிசிக்ஸ் படிப்புகளுக்கு பி.எட்., பாடத்திட்டம் இல்லை. எனவே இத்தகைய படிப்பை தேர்ந்தெடுக்கும் முன் யோசிக்க வேண்டும். படிக்கும் போதே போட்டித் தேர்வுக்கும் தயாரானால் வங்கி, ரயில்வே, டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., டி.ஆர்.பி., தேர்வில் வெற்றி பெறமுடியும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us