தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடைத்தாள் திருத்தும் இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

விடைத்தாள் திருத்தும் இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

விடைத்தாள் திருத்தும் இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை


UPDATED : மார் 30, 2011 12:00 AM

ADDED : மார் 30, 2011 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2011 12:00 AM ADDED : மார் 30, 2011 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு


விருதுநகரில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அறிவியல், கலை உட்பட மற்ற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கின. இதில் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். ஒரே அறையில் 40 முதல் 50 பேர் வரை திருத்தம் செய்யும் நிலை ஏற்பட்டது.


இருப்பினும் கழிப்பறை, விளக்கு, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் காலையில் விடைத்தாள் திருத்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மதிய உணவு இடைவேளையின்போது முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்தினாவதி, ஆசிரியர்களை சமரசம் செய்து, ஒரேநாளில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார். இதனால் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us