தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவாவில் கல்வி மொழி எது? புதிய சர்ச்சை

கோவாவில் கல்வி மொழி எது? புதிய சர்ச்சை

கோவாவில் கல்வி மொழி எது? புதிய சர்ச்சை


UPDATED : ஏப் 05, 2011 12:00 AM

ADDED : ஏப் 05, 2011 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2011 12:00 AM ADDED : ஏப் 05, 2011 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவா மாநிலத்தில் பயிற்று மொழியாக ஆங்கிலத்தைக் கொள்ள வேண்டும் என்று ஒரு பிரிவும் மண்டல மொழிகளான கொங்கனி மற்றும் மராத்திக்கு ஆதராவாக மற்றொரு பிரிவும் போராட்டங்களை அறிவித்துள்ளன.


பி.பி.எஸ்.எம்., என்னும் புதிய அமைப்பு மண்டல மொழிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளது. ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொள்ள வேண்டும் என்று ஆயிரக்கணக்கானவர்கள் கடந்த சில வாரங்களாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அந்த மாநிலத்தின் கல்வி அமைச்சரும் செயல்படுவதாக பி.பி.எஸ்.எம்., கூறியுள்ளது.


தேசிய நீரோட்டத்திலிருந்து கோவாவை பிரித்துத் தனிப்படுத்தும் முயற்சி இது என அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அந்த மாநிலத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் மேலும் சில கத்தோலிக்க எம்.எல்.ஏக்களும் கடந்த வாரம் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக கோவா மாநிலத்தில் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி பெரும் போராட்டத்தை நடத்தினர்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.பி.எஸ்.எம்., அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒரு மாநிலத்தின் மொழியில் அந்த மாநில மாணவர்கள் தங்களது கல்வியை மேற்கொள்ள முடியும். ஆனால் இதற்கு நேர் மாறாக கத்தோலிக்க பள்ளிகள் செயல்படுவதாக பி.பி.எஸ்.எம்., கருதுகிறது.


கொங்கனி மற்றும் மராத்தி மொழிப் பள்ளிகளுக்கு மட்டுமே தரப்படும் அரசு மானியங்கள் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகளுக்கும் தரப்படவேண்டும் என இந்த பள்ளிகள் கோரி வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us