தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் அடிப்படை வசதி உள்ளதா என ஆய்வு

பள்ளிகளில் அடிப்படை வசதி உள்ளதா என ஆய்வு

பள்ளிகளில் அடிப்படை வசதி உள்ளதா என ஆய்வு


UPDATED : ஏப் 09, 2011 12:00 AM

ADDED : ஏப் 09, 2011 12:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2011 12:00 AM ADDED : ஏப் 09, 2011 12:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள அரசு, நகராட்சி, மாநகராட்சி, அரசு நிதியுதவியுடன் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


ஆய்வு முடிந்ததும் ஆண்டு அறிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலர்கள், அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆய்வு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டதற்கு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்தும் அறிக்கை பெற வேண்டும். அறிக்கை வந்ததும், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரால் பள்ளி மறு ஆய்வு செய்ய வேண்டும்.


அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் இணை அமர்வு கூட்டம் நடத்த வேண்டும். மறு ஆய்வு பணிகள் மே மாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது.


அதேப்போல அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு பள்ளி கல்வி துறை அறிவித்து இருந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பள்ளி ஆய்வுகள் இப்போது தொடங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை செய்து வருகீறது. மே மாதம் ஆண்டு ஆய்வு நடக்கிறது.


இந்நிலையில், ஒவ்வொரு பள்ளிகளிலும் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் விவரங்களை திரட்டும் பணியில் பள்ளிக் கல்வி துறை ஈடுபட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு மே மாத கணக்கின்படி, சுமார் 5,000 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாகும் என்று தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us