UPDATED : ஏப் 11, 2011 12:00 AM
ADDED : ஏப் 11, 2011 05:01 PM
அ நிறம் | அளவு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 6,922 பள்ளிகள் மூலம் எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் 4,22,021 பேர் மாணவர்கள், 4, 35,935 பேர் மாணவிகள் ஆவர்.
இவர்களுடன் 97,655 தனித்தேர்வர்களும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதினர்.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி துவங்கிய பொதுத் தேர்வு ஏப்ரல் 11ஆம் தேதியான இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாநில அரசு பாடத்திட்டத்தில் சமூக அறிவியல் பாடத் தேர்வும், மெட்ரிக் திட்டத்தில் புவியியல் பாடத் தேர்வும் நடந்து முடிந்தன.
