தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய ஓவியப் போட்டி: புதுச்சேரி மாணவிக்கு ரூ.1 லட்சம் பரிசு

தேசிய ஓவியப் போட்டி: புதுச்சேரி மாணவிக்கு ரூ.1 லட்சம் பரிசு

தேசிய ஓவியப் போட்டி: புதுச்சேரி மாணவிக்கு ரூ.1 லட்சம் பரிசு


UPDATED : டிச 19, 2009 12:00 AM

ADDED : டிச 19, 2009 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2009 12:00 AM ADDED : டிச 19, 2009 02:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு


 
இந்திய அரசின் மின் ஆற்றல் அமைச்சம் சார்பில் தேசிய அளவிலான போட்டி நடந்தது. இப் போட்டியின் மாநில அளவிலான தேர்வு புதுச்சேரி கல்வித்துறையின் மாநில பயிற்சி மையம் மூலம் நடத்தப்பட்டது.

போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த 4ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், தேர்வு செய்யப்பட்ட மூன்று மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.இந்திய அரசு மின் ஆற்றல் அமைச்சம் சார்பில் தேசிய அளவிலான ஓவிய போட்டி கடந்த வாரம் டில்லியில் நடந்தது.
 
இதில் புதுச்சேரி அன்னை நடுநிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவி சாந்தினிக்கு முதல் பரிசு கிடைத்து. பரிசுத்தொகையாக ரூ. 1 லட்சம் வழங்கப் பட்டது. புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த மாணவி சாந்தினிக்கு கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா ஓட்டல் அண்ணாமலையில் நடந்தது.
 
விழாவில் சென்னை ஊரக மின்னூட்ட கழக முதன்மை திட்ட இயக்குனர் வேலுச்சாமி, புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் சுந்தரவடிவேலு, கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணராஜ் ஆகியோர் பங்கேற்று மாணவி சாந்தினியைப் பாராட்டினர். மாநிலப் பயிற்சி மைய சிறப்பு பணி அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.அன்னை நடுநிலைப்பள்ளி தாளாளர் கண்ணியப்பன் மற்றும் மாநிலப் பயிற்சி மைய விரிவுரையாளர்கள் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us