sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயிற்சி வினாக்களால் அறிவியலில் சென்டம் எளிது; 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

பயிற்சி வினாக்களால் அறிவியலில் சென்டம் எளிது; 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

பயிற்சி வினாக்களால் அறிவியலில் சென்டம் எளிது; 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி


UPDATED : மார் 31, 2026 12:50 PM

ADDED : மார் 31, 2026 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 31, 2026 12:50 PM ADDED : மார் 31, 2026 12:52 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
பயிற்சி வினாக்கள் வந்ததால் அறிவியல் தேர்வில் சென்டம் எடுப்பது எளிதாகிவிட்டதாக 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:
யோசித்து எழுத வேண்டிய நிலை

கார்த்திகா, ஸ்ரீவாசவி பள்ளி, ஆர்.எம்.காலனி, திண்டுக்கல்: பகுதி 2ல் புத்தக பயிற்சி வினாக்கள், ஆசிரியர்களின் கற்பித்தல் வினாக்களில் இருந்து கேட்கப்பட்டதால் எளிதாக இருந்தது. பகுதி 3ல் நான்கு மதிப்பெண் பகுதியில் நீள் வெட்ட விரிவு, ஒளிப்பண்புகள் குறித்த வினாக்கள் எளிமையாக இருந்தன. பகுதி 2ல் 21வது வினா பொருத்துக என்ற வினாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இயற்கை எரிவாயு குறித்து கேட்கப்பட்டு இருந்தது. இது சிறிது யோசித்து எழுத வேண்டிய நிலை இருந்தது. 75 மதிப்பெண்களில் 74 மதிப்பெண் எடுப்பேன்.

நுாற்றுக்கு நுாறு பெறுவர்

ஏ.அக்சயலட்சுமி, ஸ்ரீ சாரதா மேல்நிலைப் பள்ளி, வத்தலக்குண்டு: எழுத்துத் தேர்வில் கட்டாய வினாக்கள், ஒரு மதிப்பெண், ஏழு மதிப்பெண் வினாக்கள் சுலபமாகவே இருந்தன.

திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்டதில் இருந்து சில வினாக்கள் வந்திருந்தன. தவறான கேள்விகள் எதுவும் இல்லை. பெரும்பாலான மாணவர்கள் சென்டம் எடுப்பது எளிது. தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்.

கேள்வி எளிதாக இருந்தது

கே.சித்தேஷ், சேரன் குளோபல் பள்ளி, சித்தையன்கோட்டை: அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன. சிந்தனை திறன் சார்ந்த வினாக்களும் எதிர் கொள்ள ஏதுவான முறையில் அமைத்திருந்தன. ஒரு மதிப்பெண் முதல் அனைத்து பகுதிகளிலும் புத்தக பாடப்பகுதி சார்ந்த வினாக்களாகவே இருந்தன.

பெருமளவு வினாக்கள் ஆசிரியர்கள் பயிற்சி அளித்த வினாத்தாளில் இருந்ததால் எளிதாக இருந்தது. ஓரிரு மதிப்பெண் தவிர அதிக அளவில் ஸ்கோர் இருக்கும்.

படித்திருந்ததால் விடையளித்தேன்

இமானுவேல்ஜேக்கப், புனித மரியன்னை பள்ளி, திண்டுக்கல்: பெரும்பாலான வினாக்கள் பயிற்சி பெற்ற வினாக்களாக இருந்தன. இதனால் எளிமையாக விடையளிக்க முடிந்தது.

குறிப்பாக ஒரு மதிபெண் வினாக்களில் கேட்ட குவி லென்ஸ் குறித்த வினா, அணுக்கரு வினையியல், கூடுதல் மதிப்பெண் வினாவாக கணக்கீடுகள் பாடத்தில் இருந்து கேட்ட வினா நான் படித்திருந்ததால் விடையளித்தேன். ஏழு மதிப்பெண் வினாக்களில் கேட்கப்பட்ட இரட்டைப் இடப்பெயர்ச்சி உள்ளிட்ட வினாக்களுக்கு எளிதாக விடையளித்தேன்.

மெல்ல கற்கும் மாணவர்களும் தேர்ச்சி

எஸ்.சாருமதிதேவி, ஆசிரியை, அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி, பழநி: பெரும்பான்மையான வினாக்கள் பயிற்சி வினாக்களாக (புக் பேக்) அமைந்துள்ளன.

மிகவும் யோசித்து விடையளிக்கும் வகையில் வினாக்கள் இல்லை. நன்கு படிக்கும் மாணவர்கள் சென்டம் எடுப்பதில் பிரச்னை இல்லை. மெல்ல கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தயாரிப்பு பரிந்துரைக்காக 'கோல்டன்' வினாக்கள் தயாரித்து வினாத்தாளில் இணைக்கப்படுவது வழக்கம்.

அம்மாதிரியான வினாக்கள் இந்த முறை கேட்கப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளில் கோல்டன் வினாக்கள் கேட்கப்பட்டத்தை ஒப்பிடும் போது இந்தாண்டு வந்துள்ள வினாக்கள் குறைவு தான்.

இருப்பினும் மெல்ல கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் எவ்வித சிரமமும் இருக்காது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us