ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
UPDATED : ஏப் 29, 2026 05:42 PM
ADDED : ஏப் 29, 2026 05:42 PM
கரூர்:
கரூரில் அமைந்துள்ள, ஸ்ரீ சங்கரா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி சி.பி.எஸ்.இ., 2025 - 26ம் கல்வியாண்டிற்கான, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவி தஷிதா 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தீக் ஷி, 483 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், சர்வேஷ், அசோக் சங்கர், நிதீஸ்வரன் மற்றும் ஷிவானி ஆகியோர் தலா, 482 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தமிழில், 1 மாணவர், அறிவியலில், 2 மாணவர்கள், சமூக அறிவியலில், 3 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். பள்ளியின் ஒட்டு மொத்த தர வரிசையில், 475 மதிப்பெண்களுக்கு மேல், 21 மாணவர்களும், 450க்கு மேல், 62 மாணவர்களும், 400க்கு மேல், 125 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மகத்தான வெற்றி பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, தாளாளர் அசோக் சங்கர், செயலாளர் ஆனந்த் சங்கர், முதல்வர் காமேஸ்வர ராவ் மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டி தங்களது வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
