தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆராய்ச்சி, அறிவியல் மேம்பாட்டு: பாரதியார் பல்கலைக்கு ரூ.10 கோடி

ஆராய்ச்சி, அறிவியல் மேம்பாட்டு: பாரதியார் பல்கலைக்கு ரூ.10 கோடி

ஆராய்ச்சி, அறிவியல் மேம்பாட்டு: பாரதியார் பல்கலைக்கு ரூ.10 கோடி


UPDATED : டிச 06, 2010 12:00 AM

ADDED : டிச 06, 2010 04:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2010 12:00 AM ADDED : டிச 06, 2010 04:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மேம்பாட்டு வளர்ச்சிக்காக, பாரதியார் பல்கலைக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில், பாரதியார் பல்கலைக்கு ஒன்பது கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பெற அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 29 முதல்நிலை பல்கலைகளில் பாரதியார் பல்கலையும் அடங்கும். பல்கலை மானியக்குழு(யு.ஜி.சி) சார்பில் கூடுதல் நிதி உதவித் திட்டத்தின் கீழும் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் கூறுகையில், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வழங்கியுள்ள ஒன்பது கோடி ரூபாய், பல்கலை ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மேம்பாட்டு வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும். கடந்த 1998 முதல் 2008 வரை பல்கலை வெளியிட்டுள்ள பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் அடிப்படையில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் ‘இன்ஸ்பையர்’ திட்டத்தின் வாயிலாக நிதி வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் முகாம்கள் நடத்தி, மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை தூண்ட இந்நிதி பயன்படுத்தப்படும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us